புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைச்சர்கள் பங்கீடு குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டு இன்று (ஜூன்.23) காலை முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தமிழிசையை சந்தித்து அமைச்சரவை பட்டியல்களை வழங்கினார்.
இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது, “புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. தடுப்பூசியை ஊக்கப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றது. மிகப்பெரிய ஜவுளி நிறுவனம் தடுப்பூசி செலுத்திகொண்டால் 10 விழுக்காடு தள்ளுபடி என்று அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
டெல்டா பிளஸ் வரைஸ் தாக்குதலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். புதுச்சேரி மாநிலத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை.
முதலமைச்சர் ரங்கசாமி அளித்த அமைச்சரவை பட்டியல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜூன் 27ஆம் தேதி மதியம் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த இழுபறி: ஆளுநரிடம் அமைச்சர்கள் பட்டியலை வழங்கிய ரங்கசாமி