ETV Bharat / bharat

கோயில் தகவல்களை அறிந்துகொள்ள இணையதள வசதி!

புதுச்சேரி: இந்து சமய அறநிலை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் தகவல்களை அறிந்து கொள்வதற்கான இணையதள வசதியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தொடங்கி வைத்தார்.

 start  Internet facility to know the temple information

author img

By

Published : May 20, 2021, 9:13 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 243 கோயில்களின் தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை முறையை பொது மக்களுக்கு வழங்கும் பொருட்டு, அதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தை துணை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் நேற்று (மே.19) தொடங்கி வைத்தார்.

இந்த இணையதளத்திலிருந்து மக்கள் 243 கோயில் நிர்வாகத்தின் வரவுகள், செலவுகள், பூஜைகள், திருவிழாக்கள் அசையும், அசையா சொத்துக்களின் விவரங்கள், நன்கொடைகள், திருப்பணிகள் , விதிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்வதுடன் சுவாமிகளின் தரிசனம், பூஜைகள் விழாக்களை http ://hri.py.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "இந்தியாவில் யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியில் தான் முதன் முறையாக இத்தகைய இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மதசார்பின்மையோடு உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மக்களுக்கு என்னென்ன தகவல்கள் இருக்கின்றன என்பது இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. இதை உருவாக்கிய தேசிய தகவல் மையத்திற்கு எனது நன்றி" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.