புதுச்சேரி உள்ளடக்கிய நான்கு பிராந்தியங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2020 ஆகஸ்ட் 29ஆம் தேதி உயர்த்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொதுமக்கள் நலன் கருதி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி விதிப்பை 2 விழுக்காடு உடனடியாக குறைக்க உத்தரவிட்டுள்ளார். விரைவில் புதுச்சேரியை உள்ளடக்கிய நான்கு பிராந்தியங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 காசுகள் குறைக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.54, டீசல் லிட்டருக்கு ரூ.86.08 என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: ’பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்’