ETV Bharat / bharat

கர்நாடகாவின் 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருதுக்கு தமிழ் எழுத்தாளர் இமையம் தேர்வு! - தமிழ் எழுத்தாளர் விருதுகள்

கர்நாடகாவில் வழங்கப்படும் 'குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார்' விருதுக்கு தமிழ் எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருதுக்கு தமிழ் எழுத்தாளர் இமையம் தேர்வு

author img

By

Published : Nov 24, 2022, 4:35 PM IST

பெங்களூரு: நடப்பு ஆண்டுக்கான 'குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார்’ விருதுக்கு பிரபல தமிழ் எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராஷ்டிரகவி குவெம்பு பிரதிஷ்டானத்தின் இடைக்காலத் தலைவர் பி.எல்.சங்கர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக கவிஞர் குவேம்புவின் எழுத்துக்களைப் பிரபலப்படுத்தவும், அவர் முன்வைத்த கொள்கைகளைப் பரப்பவும் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையான ராஷ்டிரகவி குவெம்பு பிரதிஷ்டானாவால் இந்த குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது நிறுவப்பட்டது. இதுகுறித்து சித்ரகலா பரிஷத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி.எல்.சங்கர், "பெங்களூரில் நவம்பர் 20-ம் தேதி குவெம்பு தேசிய விருது தேர்வுக் குழு கூட்டம் நடந்தது. இதில் சென்னை கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். கிருஷ்ணசாமி, சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்ச்செல்வி மற்றும் சாகித்ய அகாடமியின் ஓய்வுபெற்ற செயலாளர்கள் டாக்டர் அக்ரஹார கிருஷ்ணமூர்த்தி நடுவராகப் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் ஹம்பனா, இணைச் செயலாளர் கடைதல் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விருதுக்கு மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் மூவராக சுருக்கப்பட்டது. இறுதியாக, தனது முக்கியமான படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தின் செழுமையையும் உண்மையையும் உயர்த்திய, இன்றைய எழுத்தாளர்களில் முக்கியமானவரான 'இமையம்' என்று அழைக்கப்படும் வி.அண்ணாமலை 2022-ம் ஆண்டுக்கான குவெம்பு தேசிய விருதுக்கு ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேசியக் கவிஞர் குவேம்பூரின் பிறந்தநாளில் (டிசம்பர் 29) எழுத்தாளர் இமையத்திற்கு குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் வழங்கப்படும். இந்த விருதை எழுத்தாளர் இமையம் ஏற்றுக்கொண்டார்.”என்று தெரிவித்தார்.

இந்த விருது ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை உள்ளடக்கியது. இதுவரை 9 மொழி எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்றும், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை விருது வழங்குவார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிஸ்லரி வாட்டர் நிறுவனத்தை வாங்கும் டாடா குழுமம்..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.