ETV Bharat / bharat

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா - Temple Gundam Festival

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.

இஸ்லாமிய பள்ளி வாசல் முன் தீக்குண்டம் வார்ப்பு

author img

By

Published : Mar 25, 2021, 10:42 PM IST

தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடியில் கோயில் முன்புறப் பக்கவாட்டில் பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ளது. இக்கோயில் முன்புறம் பள்ளிவாசலில் தீக்குண்டம் வார்க்கப்பட்டு பூசாரி தீமிதித்தார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் இரு மாநில எல்லையான தாளவாடியில் பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் இடபுறப் பக்கவாட்டில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசலும் அடுத்தாக ராமர் கோயிலும் உள்ளன. ஆண்டுதோறும் தமிழ்நாடு கர்நாடக பக்தர்கள் இணைந்து இக்கோயிலில் குண்டம் திருவிழாவை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

இதையடுத்து, இந்தாண்டுக்கான விழா நேற்றிரவு தொடங்கியது. இதில், மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்ற பிறகு கோயில் அருகே உள்ள பள்ளி வாசல் முன்பு விறகு அடுக்கி 60 அடி தீக்குண்டம் வார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தீக்குண்டம் பூசாரி இறங்குவதற்கேற்ப சமன்படுத்தப்பட்டது. இந்த விழாவையொட்டி மாரியம்மன் உற்சவ சிலை, மேள வாத்தியங்கள் முழங்க தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

இந்த குண்டம் திருவிழாவில் தாளவாடி தொட்டகாஜனூர் தலமலை கோடிபுரம் சாம்ராஜ்நகர் சிக்கொலா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். காலை நேரத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதால் தொழுகைக்கு பின் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க இதுதான் அது' செங்கல் எப்படி எய்ம்ஸ் மருத்துவமனையானது? உதயநிதியின் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.