டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் கோவிட் பரவல் குறித்து தனது வேதனையை தெரிவித்தார். அப்போது, ஒன்றிய அரசு விற்பனையில் பிஸியாக இருக்கிறது எனவும் விமர்சித்தார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “நாட்டில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. அடுத்த அலையின் தீவிர விளைவுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி எடுக்க தவறாதீர்கள்.
தயவுசெய்து உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள். ஒன்றிய அரசு விற்பனையில் பிஸியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 164 பேர் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 607 ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 530 பேர் கோவிட் பெருந்தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 4 லட்சத்து 36 ஆயிரத்து 365 ஆக உள்ளது. தற்போதுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 725 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க : தங்கை பிரியங்காவுக்கு என் வாழ்வில் சிறப்பிடம் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி