சமூக வலைதளங்களில் விதிமுறைகள் மீறப்படும்போது அது குறித்த புகார் எழுந்தால், சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ட்விட்டர் நிறுவனம் தனது முதல் புகார் தீர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த மே 26 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை வந்துள்ள புகார்களின் அடிப்படையில் 22,564 ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுகக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதத் தூண்டுதல் உள்ளிட்ட புகார்கள் மேற்கண்ட கணக்குகள் மீது அளிக்கப்பட்டன. அத்துடன் நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, புகார் அலுவலராக வினய் பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாதிக்க பிறந்தவள் மலாலா!