ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலியில் பாந்த்ரா-ஜோத்பூர் சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் இன்று (ஜனவரி 2) அதிகாலை தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இதுகுறித்து வடமேற்கு ரயில்வே தரப்பில், பாந்த்ராவில் இருந்து ஜோத்பூர் நோக்கிப் புறப்பட்ட சூர்யனநகரி எக்ஸ்பிரஸ்(suryanagari express) ரயிலின் 11 பெட்டிகள் ராஜ்கியாவாஸ்-போமத்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை 3:27 மணியளவில் தடம் புரண்டன.
இதுவரை உயிரிழப்புகளோ, படுகாயங்களோ பதிவாகவில்லை. ரயில்வே போலீசாருடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு ரயிலில் பயணித்த குடும்ப உறுப்பினர்களுக்கான ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், மார்வார் சந்திப்பில் இருந்து புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள், ரயிலுக்குள் அதிர்வை உணர முடிந்தது. 2-3 நிமிடங்களுக்குப் பிறகு, ரயில் நின்றுவிட்டது. சகப்பயணிகளுடன் கீழே இறங்கி பார்த்தேன். பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகியிருந்தன. 15-20 நிமிடங்களுக்குள் சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Rishabh Pant: ரிஷப் பண்ட் உடல்நிலையில் முன்னேற்றம்; ஐசியூவில் இருந்து மாற்றம்