ETV Bharat / bharat

"வழக்கறிஞர் அறையில் நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும்" - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன? - சுயமரியாதை திருமணம் முறை

Self Respect Marriage: வழக்கறிஞர்கள் அறை மற்றும் தொழிற்சங்க அலுவலகங்களில் வைத்து நடைபெறும் திருமணங்கள் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

Self Respect Marriages
Self Respect Marriages
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 7:17 AM IST

Updated : Aug 29, 2023, 8:24 AM IST

டெல்லி : வழக்கறிஞர்கள் அறை மற்றும் தொழிற்சங்க அலுவலகங்களில் நடக்கும் சுயமரியாதை திருமணம் செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கறிஞர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகாது என்றும் இந்து திருமணச் சட்டம் 7 மற்றும் 7-A எதிரான திருமணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் கடந்த மே மாதம் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

மேலும், வழக்கறிஞர்கள் அலுவலகம் அல்லது தொழிற்சங்க அலுவலகங்களில் ரகசிய திருமணங்களை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த எஸ். ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர்கள் அலுவலகங்களில் நடைபெறும் திருமணங்கள் செல்லுபடியாகும் என்று அறிவித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்தனர். மேலும், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அதிகாரிகளாக இருப்பதால், இந்து திருமணச் சட்டம் 1955யின் படி சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இருப்பினும், இந்து திருமணச் சட்டப்பிரிவு 7(A)இன்படி, வழக்கறிஞர்கள் நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருந்து தனிப்பட்ட அளவில் திருமணங்களுக்கு சாட்சிகளாக இருக்கலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைக்க பூசாரி, ஐயர் உள்ளிட்டவர்கள் இருக்க அவசியமில்லை என்பதை உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஒரு நபரின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை உரிமையை இந்து திருமணச் சட்டம் நிலைநிறுத்துவதால், மற்றவரின் விரலில் மோதிரத்தை அணிவிப்பதன் மூலமாகவோ அல்லது ஒருவருக்கொருவர் மாலை அணிவிப்பதன் மூலமோ வழக்கறிஞர்கள் அறையில் திருமணத்தை நடத்தலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்டு உள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : கால்நடை தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Aug 29, 2023, 8:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.