கரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், முன்பிணை கோரி மனு தாக்கல்செய்வதற்கும் கட்டுப்பாடு விதித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும் எனத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் முன்பிணை கோரும் மனுக்களை ஏற்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி கட்டுப்பாட்டுக்குத் தடை
கரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஜூலை 17ஆம் தேதிவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதற்கு நீதிபதிகள் நாகேஷ்வர ராவ், அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய ராஜஸ்தான் உயர் நீதிமன்ற அமர்வே, உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்செய்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவல் துறையின் விசாரணை அதிகாரங்களுக்குத் தனி நீதிபதியின் உத்தரவு கட்டுப்பாடு விதிப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் முன்பிணை மனுக்களை ஏற்க வேண்டும் என்ற உத்தரவு தனிநபருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறுவதாகும் எனவும் கூறியுள்ளது. இதனையடுத்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த கட்டுப்பாட்டுக்குத் தடைவிதித்து, உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 29) உத்தரவிட்டது.
இதையும் படிங்க: 'தனிப்பட்ட பகை இல்லை, சேவை செய்ய விரும்புகிறேன்'- நவ்ஜோத் சிங் சித்து!