டெல்லி: பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வழக்கின் விசாரணையை, ஆந்திர மாநிலத்திற்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டுமென குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
இதனையடுத்து இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டிஜிபியின் மனுவை நிராகரித்துள்ளது. மேலும், தன் மீது தொடுக்கப்பட்ட பாலியல் புகார் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தேவைப்படும்பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை - சிறப்பு டிஜிபி, எஸ்பி மனு தள்ளுபடி