நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு தோ்தல் ஆணையம்தான் காரணம் என்று சென்னை உயா் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று (மே 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா பரவலுக்கு காரணமான தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் கூட சுமத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கடுமையானது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.
ஊடகங்கள் தொடர்ந்து சுதந்திரமாக செயல்படலாம். நீதிமன்ற நிகழ்வுகளை செய்திகளாக வெளியிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.