ETV Bharat / bharat

முல்லை பெரியாறு அணை விவகாரம்.. கேரள அரசு வாதத்திற்கு மறுப்பு... கண்காணிப்பு குழுவுக்கே முழு அதிகாரம்... - முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், இரு மாநில அரசுகளும் குழுவிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

supreme court of india
supreme court of india
author img

By

Published : Apr 9, 2022, 12:24 PM IST

பழமையான அணை: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை 1895ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது கட்டப்பட்டு 126 ஆண்டுகள் கடந்துவிட்டதால், இதற்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், அணைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன.

இதனிடையே உச்ச நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணைக்கு கண்காணிப்பு குழுவை நியமித்தது. இந்த குழுவின் ஆய்வு முடிவில், அணை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு, அணைக்கென்று கால உச்சவரம்பு உள்ளது.

இந்த வரம்பை முல்லை பெரியாறு அணை கடந்து விட்டது. எனவே அணை நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து 139.99 அடியாக குறைக்க வேண்டும் என்று வாதிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (ஏப். 8) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு, முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு குழுவை மாற்ற வேண்டும். இந்த குழு அணையின் பாதுகாப்புக்கு தடையாக உள்ளது என்று வாதிட்டது.

அப்போது நீதிபதிகள், "முல்லை பெரியாறு அணி கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் திருப்திகரமாகவே உள்ளன. இந்த குழுவில் மத்திய நீர்வள ஆணையத்தை சேர்ந்த உறுப்பினரும், தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த தலா ஒரு உறுப்பினரும் உள்ள நிலையில், மாநிலங்கள் சார்பில் கூடுதலாக இரண்டு உறுப்பினர்களை சேர்க்கப்பட வேண்டும்.

இரு மாநில அரசுகளும் அடுத்த இரண்டு வாரங்களில் கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும். மத்திய அரசும் இந்த குழுவிற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு அரசு, கிடப்பில் போடப்பட்டுள்ள அணையின் சீரமைப்பு பணிகள் குறித்து கண்காணிப்புக் குழுவிடம் முறையிடலாம்.

அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தக் குழுவின் உத்தரவுகளை இரு மாநில தலைமைச் செயலாளர்களும் நிறைவேற்ற வேண்டும். புதிய அணை பாதுகாப்பு சட்டத்தின்படி தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்வரையில், இந்த குழுவின் செயல்பாடுகளுக்கும், உத்தரவுகளுக்கும் இரு மாநிலங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணை வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை முக்கிய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.