ETV Bharat / bharat

ஆபாச வீடியோக்களால் விபரீதம்... 10 வயது சிறுமி தற்கொலை வழக்கில் திருப்பம்... - சத்தீஸ்கரில் சிறுமி பாலியல் வன்புணர்வு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

'Suicide' of minor girl turns out to be rape and murder in Chhattisgarh's Bemetara, accused held

author img

By

Published : Nov 30, 2022, 7:58 PM IST

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் 10 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெமேதராவின் கோட்வாலியில் வசித்துவரும் மாணிக்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது 10 வயது மகள் நவம்பர் 26ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீசார் உடற்கூராய்வு முடிவுக்காக காத்திருந்தனர். இந்த உடற்கூராய்வு முடிவில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் போலீசார் இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகித்து, விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் சிறுமிக்கும் இடையே பேச்சுவார்த்தை இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் உண்மை வெளியானது. அதாவது, சம்பவ நாளன்று இந்த இளைஞர் தனது வீட்டில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.

அதன்பின் சிறுமியின் வாயை துணியால் கட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனிடையே சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் வீட்டிலிருந்த கயிற்றை வைத்து சிறுமி தற்கொலை செய்துகொண்டது போல தூக்கிலிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.