வாஷிங்டன் [அமெரிக்கா]: அமெரிக்காவின் ஆராய்ச்சி பத்திரிகையான 'ஆன் அடிக்ஷன்' இதழ் நடத்திய ஒரு ஆய்வின்படி, மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவைப் பயன்படுத்துபவர்கள் நிக்கோட்டின் பொருட்களை உட்கொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது சாதாரணமாக நிக்கோடின் உட்கொள்ளாதோரை விட அதிகமாகும்.
வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, மருத்துவ மரிஜுவானா (மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் கஞ்சா) மருந்துகள் பயன்படுத்தும் நோயாளிகளிடையே நிக்கோட்டின் பயன்பாட்டை முதலில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குறித்துப்பேசிய மரியோ ஸ்கூல் ஆஃப் பார்மசி ரட்ஜர்ஸ் எர்னஸ்டின் மருத்துவப் பேராசிரியர் மேரி பிரிட்ஜ்மேன் கூறுகையில், "கஞ்சா மற்றும் நிக்கோட்டினை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது அதிகரித்து வருவது கவலையாக உள்ளது. ஆனால், போதைக்காக கஞ்சா பயன்படுத்தப்படுவது மற்றும் நிக்கோடின் பயன்படுத்தப்படுவது ஆகியவற்றிற்கு இடையே தொடர்பு இருந்தாலும், மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்துபவர்களிடையே நிக்கோட்டின் பயன்பாடு பற்றி அதிகம் அறியப்படவில்லை" என்று கூறினார்.
மருத்துவ மரிஜுவானா (மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் கஞ்சா) 18 வயது முதல் 89 வயதுக்குட்பட்ட 697 நோயாளிகளிடம் தரப்பட்டு, அவர்களின் நிக்கோட்டின் மற்றும் கஞ்சா பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் கஞ்சாவை எவ்வாறு சுயமாகப் பயன்படுத்தினார்கள் என்பது குறித்தும் மற்றும் சிகிச்சைக்கான கஞ்சாவைப் பயன்படுத்துவதற்குத் தகுதியான மருத்துவ நிலைமைகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
மருத்துவ மரிஜுவானா(மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் கஞ்சா) பயன்படுத்துபவர்களில் 40 விழுக்காடு பேர் நிக்கோட்டினைப் பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின்படி அமெரிக்காவில் புகைப்பிடிக்கும் பெரியவர்களில் 14 விழுக்காட்டைவிட, இந்த நிக்கோட்டின் பயன்படுத்துவோர் விகிதம் மிகவும் அதிகமாகும்.
கஞ்சா பயன்படுத்துபவர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அதில், 75 விழுக்காடு பேர் கஞ்சா உட்கொள்வதை விட, அதனை புகைக்க விரும்புவதாகவும், சிகரெட் புகைப்பவர்களில் 80 விழுக்காடு பேர் அடுத்த ஆறு மாதங்களில் பழக்கத்தை கைவிட திட்டம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மருத்துவ கஞ்சாவால் ஏற்படும் உடல் நலக்குறைவினைத் தவிர்க்க, கஞ்சா புகைப்பதை விட ஒரு சிறப்பு சாதனத்திலிருந்து நிக்கோடின் கொண்ட நீராவியினை சுவாசிக்கும் பழக்கத்தை செய்ய பரிந்துரைக்கலாம். இந்தப் பரிந்துரை மட்டும் சிகரெட் புகைக்கும் நோயாளிகளைப் பாதிக்காது என்று இந்த கண்டுபிடிப்புகள் தெரிவித்துள்ளன.
மருத்துவப்பள்ளியில் மனநலப் பிரிவில் பேராசிரியராகப்பணி புரியும் ரட்ஜர்ஸ் ராபர்ட் வுட் ஜான்சனும் இதையே வாப்பிங் எனப்படும் ஒரு சிறப்பு சாதனத்திலிருந்து நிக்கோடின் கொண்ட நீராவியினை சுவாசிக்கும் பழக்கத்தை செய்வதையே பரிந்துரை செய்கிறார்.
மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்துபவர்களிடையே நிக்கோட்டின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், சிகரெட் புகைப்பவர்கள் கஞ்சாவை புகைத்து உட்கொள்ளவே தேர்வு செய்கிறார்கள். அவர்களும் நிக்கோடினைப் பயன்படுத்துவதை நிறுத்த முயல்கிறார்கள் என்ற உண்மை, மருந்தகங்கள் புகையிலை கட்டுப்பாட்டு மையம் மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:கொடூரமான செய்திகளை விரும்புகிறீர்களா...அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்