ஃபருகாபாத்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபருகாபாத் என்ற பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால் 159 மாணவ, மாணவிகளுக்கு 3 ஆசிரியர்களால் சாலையில் பாடம் கற்பிக்கப்படுகிறது. பள்ளியில் உள்ள ஒரே அறையிலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடியாத அவல நிலையால், பள்ளியின் வெளியே கடும் குளிரில் மாணவர்கள் சாலையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜ்புவா பகுதியில் உள்ள கலர்பூர் ஆரம்பப் பள்ளி அதிகாரிகள் இந்த அவல நிலை குறித்து புகார் கூறியும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். பள்ளியின் தாளாளர் யாதிந்த்ரா காரே, "பள்ளியின் இடப் பற்றாக்குறைக்கு நிலப் பிரச்னைதான் காரணம் என கூறியுள்ளார்.
மேலும் இந்த பள்ளிக்கு ஐந்து வகுப்பறைகள் தேவை, தற்போது பள்ளியில் ஒரு வகுப்பறை, ஒரு கழிவறை, ஒரு சமையலறை, ஒரு அடிகுழாய் உள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு குடிநீர் வசதி பள்ளியிலிருந்து வெகு தூரம் தொலைவில் உள்ளது” என்றார். மேலும் பள்ளி தாளாளர், "பள்ளியில் இன்னொரு அறை உள்ளது. அது எழுது பொருட்கள் மற்றும் மேஜைகள் வைக்க பயன்படுத்தப்படுகிறது.
தான் இந்த 2021ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு தாளாளராக பணிபுரியத் தொடங்கியது முதல், எந்த வித உட்கட்டமைப்பு வளர்ச்சியும் கண்டதில்லை” என கூறினார். பள்ளி தாளாளர் காரே கூறியபடி, 1962-இல் கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டடம், 2018-இல் ஏலத்திற்கு விடப்பட்டது. அதனால் இந்த கட்டடம் அதற்கு பிறகு விரிவாக்கம் செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: 'பாரத் நியாய யாத்திரை' இந்த முறை கிழக்கில் இருந்து மேற்கு.. ராகுல் காந்தியின் அடுத்த திட்டம்?