பாட்னா: பிகார் மாநிலத்தின் தலைநகர் கயாவில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள நீம்சக் பதானி தொகுதியில் உள்ள ஜர்னா சரேன் என்ற கிராமத்தில் புத்த சிக்ஷன் சன்ஸ்தான் என்ற பள்ளி 22 ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவரின் கையெழுத்தும் ஒரே மாதிரி அமைந்துள்ளது. அது இந்தி, ஆங்கிலம் என எந்த மொழியாயினும் ஒரே மாதிரி அழகிய வடிவில் எழுதுகின்றனர்.
இந்தக் கையெழுத்தைப் பார்த்து சில நேரங்களில் ஆசிரியர்களும் குழம்பி போகின்றனர். மாணவர்களின் பெயரை பார்த்துதான் அடையாளம் காண்கின்றனர் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரமௌலி பிரசாத்.
இது குறித்து சந்திரமௌலி பிரசாத் மேலும் கூறுகையில், “இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கையெழுத்தை பலரும் வெகுவாக பாராட்டுகின்றனர். மாணவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் ஆசிரியர்களின் சீரிய வழிகாட்டுதலின் அடிப்படையில் இது சாத்தியமானது” என்றார்.
மேலும் பள்ளிக் குழந்தைகளை முதலில் சிலேட்டில் எழுத வைப்பதாகவும், அதன்பின்னர் பென்சில் மற்றும் பேனா வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தேர்வெழுத பள்ளிக்கு வாருங்கள்- அன்பில் மகேஷ்!