இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவலின் வேகம் அதிகரித்துவருகிறது. இதன் பரிசோதனைகளை தீவிரப்படுத்தி, கரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், தொற்று உயர்வால் மாணவர்களிடையே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில், ஐ.ஐ.டி. ரூர்கி கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். இதனால், அப்பகுதி தனிமைப்படுத்தபட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரகாண்ட் ஐ.ஐ.டி. ரூர்கி நிறுவனத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் பிரேம் சிங். கரோனா பரவலின் காரணமாக கல்வி நிறுவனம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து மாணவர்கள் தனிமைபடுத்தலில் வைக்கப்பட்டனர். நேற்று ( ஏப்ரல் 14) மாணவர் மாயக் நிலையில் கிடந்தார்.
இதனை கண்ட நிர்வாக அலுவலர்கள் மாணவனை மீட்டெடுத்து அருகில் உள்ள மருத்துவமையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மாணவர் இறந்து விட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து, கல்வி நிறுவன அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்ணை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிக்கையாளரின் நேரடி சாட்சியங்கள்!