ETV Bharat / bharat

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: உயர் அலுவலர்கள் ஆலோசனை - டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

டெல்லி: பண்டிகை காலத்தில் தலைநகரில் கரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து, மத்திய உள் துறைச் செயலர் அஜய் குமார் பெல்லா அரசு அலுவலர்களுடன் தடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

ya
yaaaya
author img

By

Published : Nov 2, 2020, 8:10 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தலைநகரான டெல்லியில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.இது குறித்து அரசு அலுவலர்களுடன் மத்திய உள் துறைச் செயலர் அஜய் குமார் பெல்லா ஆலோசனை மேற்கொண்டார்.

அவர் கூறுகையில், "தற்போது பண்டிகை காலத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதை காணமுடிகிறது. மக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளன.

பண்டிகை காலத்தை மக்கள் பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும். கரோனா குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். தற்போது, 15,789 படுக்கைகள் மக்களின் பயன்பாட்டிற்காக காலியாக உள்ளன.

உணவகங்கள், சந்தை, முடிதிருத்தும் கடைகள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஆர்டிபிசிஆர் சோதனை நடத்திட முடிவு செய்துள்ளோம். பல மாவட்டங்களின் கரோனா பாதிப்புகள் குறித்து அடுத்த வாரம் மீண்டும் கலந்தாலோசிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்

இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூசன், டாக்டர் பால்ராம் பார்கவா, ஐ.சி.எம்.ஆர். தலைமைச் செயலர், டெல்லி அரசின் மூத்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

டெல்லியில் கடந்த சில நாள்களாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.