ஆந்திராவின் துறைமுகத் தலைநகரமான விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் எஃகு ஆலையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் விசாகப்பட்டினம் எஃகு ஆலையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக பாஜக தவிர, அனைத்துக்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆந்திராவில் மாநிலம் தழுவிய பந்த்திற்கு இன்று (மார்ச் 5) அழைப்பு விடுத்துள்ளன.
இந்த பந்த்திற்கு மாநிலத்தில் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதனால், அனைத்து கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா கூறுகையில், 'பந்த்திற்கு மாநில அரசு ஆதரவை வழங்குகிறது. ஆந்திர போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... குட்டி நாயைத் தத்தெடுத்து தாயான ஆண் குரங்கு