ETV Bharat / bharat

மத்திய அரசில் சுருக்கெழுத்தாளர் சி மற்றும் டி நிலைத் தேர்வு - stenographer recruitment 2022

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கெழுத்தாளர் சி மற்றும் டி நிலைத் தேர்வுக்கான‌ அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

STAFF SELECTION COMMISSION STENOGRAPHER
STAFF SELECTION COMMISSION STENOGRAPHER
author img

By

Published : Aug 23, 2022, 3:26 PM IST

டெல்லி: இதுகுறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் கே. நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள்/ நிறுவனங்களில் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலைகளுக்கு பணியாளர்களை அமர்த்துவதற்கான தேர்வு கணினி வாயிலாக நடக்கிறது. சுருக்கெழுத்தில் திறமை வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி சம்பந்தமான விவரங்கள், வயதுவரம்பு, அடிப்படைக் கல்வி தகுதி, கட்டணம், தேர்வு விவரங்கள், எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கையை ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதோடு மேற்கூறிய இணைதளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

05.09.2022 (இரவு 11 மணி) வரை இணைய வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணைய வழியாக தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி 06.09.2022 (இரவு 11 மணி). இணைய வழி விண்ணப்பப் படிவத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையெழுத்தை விண்ணப்பதாரர் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படத்தில் விண்ணப்பதாரர் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது.

இந்த தேர்வு தென் மண்டலத்தில், தமிழ்நாட்டில் 5 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும், ஆந்திர பிரதேசத்தில் 6 மையங்களிலும், தெலங்கானாவில் 2 மையங்களிலும் என மொத்தம் 14 மையங்களில் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'வென்ற ஏழையின் வைராக்கியம்':சாம்சங் நிறுவனத்தில் ரூ.21 லட்சம் ஆண்டு ஊதியத்துடன் பணிபெற்ற பி.இ.பட்டதாரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.