புதுச்சேரி: இலங்கை - காரைக்கால் மீனவர்கள் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கண்டு நல்லுறவு வளர்ப்பது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள், முதலமைச்சர் ரங்கசாமியை சட்டபேரவையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இலங்கை பிரதமர் இணைப்பு செயலரும் முன்னாள் முதலமைச்சருமான செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை இன்று சந்தித்தனர்.
அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது இலங்கை - காரைக்கால் மீனவர்கள் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கண்டு நல்லுறவு வளர்ப்பது தொடர்பாகவும், காரைக்கால் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடத்தினர்.
![srilanka ministers met puducherry cm](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-04-cm-srilanka-minister-met-tn10044_15092021211639_1509f_1631720799_1063.jpg)
இந்தச் சந்திப்பின்போது புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, பொதுப்பணித் துறை செயலர் விக்ராந்த் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
முதலமைச்சரைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அலுவலகம் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அலுவலகம் சென்றும் அவர்களை இலங்கை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை வளாகத்தில் குட்கா மென்று துப்பிய நபர்: சுத்தம் செய்யவைத்த ஆட்சியர்!