ETV Bharat / bharat

Sridevi 60th birthday: கூகுள் வெளியிட்ட டூடுளின் பின்னணி! - நடிகை ஶ்ரீதேவி மரணம்

நடிகை Sridevi-இன் 60வது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

Google honour
நடிகை ஶ்ரீதேவி
author img

By

Published : Aug 13, 2023, 11:29 AM IST

Updated : Aug 13, 2023, 11:42 AM IST

ஹைதராபாத்: இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை Sridevi-இன் 60வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 13) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகை Sridevi-யை கெளரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. Sridevi-இன் புகைப்படம் கொண்ட இந்த வண்ணமயமான டூடுளை மும்பையைச் சேர்ந்த பூமிகா முகர்ஜி என்ற கலைஞர் வடிவமைத்துள்ளார்.

நடிகை Sridevi, கடந்த 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பன். தனது 4 வயதில் கந்தன் கருணை திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட Sridevi, கடந்த 1976ஆம் ஆண்டு தனது 13வது வயதில், இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் நாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்காக Sridevi-க்கு தேசிய விருது கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்தார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் இவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில், ரஜினியுடன் Sridevi இணைந்து நடித்த ‘ஜானி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை, தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் ரஜினியுடன் நடித்திருந்தார். அதேபோல், கமல்ஹாசனுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் Sridevi நடித்துள்ளார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, சங்கர்லால், வாழ்வே மாயம் உள்ளிட்ட திரைப்படங்களில் கமல்ஹாசன், Sridevi ஆகிய இருவரும் இணைந்து நடித்தனர். தமிழ்நாட்டில் கமல்ஹாசன் - Sridevi ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், Sridevi. இந்தியில் சாந்தினி, லாம்ஹே, மிஸ்டர் இந்தியா, நாகினா, இங்கிலீஷ் விங்கிலிஷ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பல மொழி பேசும் நடிகையான Sridevi, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிப் படங்களிலும் நடித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

Sridevi, திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். Sridevi கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் உயிரிழந்தார். இவர் கடைசியாக "மாம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது Sridevi-க்கு வழங்கப்பட்டது. அவர் இறப்புக்குப் பிறகு இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மெழுகு பொம்மை போல் உள்ள குஷி கபூர்.. வைரலாகும் புகைப்படங்கள்!

Last Updated : Aug 13, 2023, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.