பெங்களூரு: தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலம் மைக்கோ லேஅவுட் வழியாக அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தி கடத்தப்பட உள்ளதாக பெங்களூரு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவலர்கள் மைக்கோ லேஅவுட் சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பேருடன் வந்த காரில் திமிங்கல வாந்தி சிக்கியது. உடனே அதனை பறிமுதல் செய்த காவலர்கள், மூவரையும் கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பன்னீர்செல்வம், ஆனந்த் சேகர், மஞ்சு என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரிஸின் மதிப்பு ரூ. 4 கோடி என்பதும் தெரியவந்துள்ளது.
அம்பர்கிரிஸ் என்றால் என்ன?
அம்பர்கிரிஸ் (Ambergris), திமிங்கிலத்தின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவாகும். இது சாம்பல், கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். பாலியல் மருந்துகள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது. உலக அளவில் இதற்கு மார்க்கெட் உள்ளது. சில கிலோ அம்பர்கிரிஸ் பல கோடி ரூபாயம் மதிப்புள்ளது என்பதால், பல கடத்தல் சம்பவங்களும் நிகழ்கின்றன.
இதையும் படிங்க: VIRAL VIDEO: நடுக்கடலில் ஜம்முனு ஸ்விம்மிங் போட்ட திமிங்கலம்!