பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாமராஜநகர் அருகே பந்திப்பூர் புலிகள் காப்பகப் பகுதியில் வேகமாக வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்த பெண் யானை இன்று (டிசம்பர் 14) உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறை தரப்பில், பந்திப்பூர் புலிகள் காப்பக வழியாக செல்லும் சாலையில் அதிகாலை யானை மீது லாரி மோதியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்து, லாரி ஓட்டுநர் சாரதியை கைது செய்தோம்.
முதல்கட்ட தகவலில் சாலை கடக்க முயன்ற யானை மீது லாரி மோதியதும், படுகாயமடைந்த யானை சாலையிலேயே உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த யானையின் உடலை சாலையில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளோம். உடற்கூராய்வு செய்ய கால்நடை மருத்துவர்களை வரவழைத்துள்ளோம்.
கர்நாடக மாநில அரசு பந்திப்பூர் புலிகள் காப்பக வழியாக செல்லும் சாலைகளில் இரவு நேர பயணங்களுக்கு தடைவித்துள்ளது. இருப்பினும், தடையை மீறி லாரி ஓட்டுநர் பயணித்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விலங்குநல ஆர்வலர்கள் இரவு நேரங்களில் பந்திப்பூர் புலிகள் காப்பக சாலையில் தடை விதிக்கப்பட்டும். வனத்துறையை மீறி எப்படி லாரி உள்ளே வந்தது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியா - சீனா மோதல் எதிரொலி; விமானப் படைகளைத் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தல்