ETV Bharat / bharat

தென்மேற்கு பருவ மழை: வட மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை கனமழை எச்சரிக்கை! - imd

தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் ஜூலை 10ஆம் தேதியிலிருந்து தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

southwest-monsoon
southwest-monsoon
author img

By

Published : Jul 8, 2021, 4:28 PM IST

வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்குப் பருவமழை, நாட்டின் கிழக்கு மாநிலங்களில் தொடங்கவுள்ளது.

அங்கிருந்து ஜூலை 10ஆம் தேதிக்குள் பஞ்சாப், வடக்கு ஹரியானாவை உள்ளடக்கிய வடமேற்கு வரை பரவக்கூடும். அதன்படி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லியின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

அதைத்தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல இன்று(ஜூலை.8) முதல் 12ஆம் தேதி வரை வரை மகாராஷ்டிரா, கோவா, லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, மாஹே ஆகிய பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும். மும்பை கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ வரை இருக்கக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை ஜூலை 10 முதல் 12ஆம் தேதி வரையிலான நாட்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

அதன்படி நாளை(ஜூலை 11) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 12ஆம் தேதியில் பருவமழை தீவிரமடைவதன் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூலை 9ஆம் முதல் 12ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு அலெர்ட் - 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.