ETV Bharat / bharat

அதானி குழும விவகாரம்; காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் எனத் தகவல்! - காங்கிரஸ் கட்சி போராட்டம்

அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிக் கிளைகளின் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம்

author img

By

Published : Feb 6, 2023, 7:59 AM IST

டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனனம் கடந்த சில நாட்களுக்கு முன், அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பலவீனமான வணிக அடிப்படைகளை கொண்டுள்ளது என்றும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பங்குசந்தையில் தங்களது நிறுவனத்தின் பங்குகளை செயற்கையாக உயர்தியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டகள் கூறப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் விளைவாக அதானியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக அதானியின் 10 நிறுவனங்கள் 8 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளன. இருப்பினும் அதானி குழுமம் தங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது.

மேலும் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதால் அதற்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டாலும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் மீதான எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகள் நடுத்தர மக்களின் சேமிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று (பிப்ரவரி 6) நாடு முழுவதும் எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கி கிளைகளின் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு பாரத் ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 3 ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு அனுமதிக்கவில்லை என கூறி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த இரு நாட்களாக முடங்கின. தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் அதானி குழும விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதையும் படிங்க: அதானி குழும பங்குகள் தொடர் சரிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.