கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று(மார்ச் 11) முன்தினம் நந்திகிராம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள கோயில் ஒன்றில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதனால் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இடது காலின் பாதம் மற்றும் மூட்டு பலமாக காயமடைந்துள்ளது, அதுமட்டுமின்றி, முன் கை, தோல்பட்டை, கழுத்து ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் மம்தா பானர்ஜியை நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் சந்திந்து நலம் விசாரித்தார். இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மம்தாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னதாக நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கங்குலியை மம்தா நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இது திதி ஸ்டைல்...நந்திகிராமில் டீ போட்டு அசத்திய மம்தா