ETV Bharat / bharat

அஸ்ஸாம் - மிசோரம் பிரச்னை: அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய சர்பானந்த சோனோவால்!

author img

By

Published : Nov 3, 2020, 12:37 PM IST

திஸ்பூர்: அஸ்ஸாம், மிசோரம் மாநிலங்களுக்கிடையே தொடர் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு அங்கமாக இருந்துவந்த மிசோரம், கடந்த 1972ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு, அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.

தெற்கு அஸ்ஸாமில் உள்ள காசர், ஹைலகாண்டி, கரிம்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்கள் மிசோரமின் கோலாசிப், மமிட், அய்சால் உள்ளிட்ட மாவட்டங்களுடன் எல்லையை பகிர்கின்றது. எல்லையிலுள்ள பெரும்பாலான பகுதிகளை இரு மாநிலங்களும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது தொடர்பாக அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இதற்கிடையே, அஸ்ஸாம் மாநிலம், சச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இது இரு மாநிலங்களுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் கடிதம் எழுதியுள்ளார். வன்முறை குறித்த நிகழ்வுகளை விவரமாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு 5 லட்சம் வழங்கப்படும் என சோனோவால் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: கோட்டையை கைப்பற்றுமா காங்கிரஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.