ETV Bharat / bharat

பஞ்சாப் பஞ்சாயத்து: அமரீந்தர் சிங், சித்துவை டெல்லிக்கு அழைத்த சோனியா! - கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு சோனியா காந்தி அழைப்பு

பஞ்சாப் காங்கிரசில் உள்கட்சி மோதல் உச்சமடைந்த நிலையில் கிளர்ச்சியில் ஈடுபடும் தலைவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூவர் கொண்ட குழு ஈடுபட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை சோனியா காந்தி கையிலெடுத்துள்ளார். முதலமைச்சர் அமரீந்தர் சிங், முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரை ஜூன் 20ஆம் தேதி டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

பஞ்சாப் பஞ்சாயத்து: அமரீந்தர் சிங், சித்துவை டெல்லிக்கு அழைத்த சோனியா!

author img

By

Published : Jun 17, 2021, 8:39 AM IST

டெல்லி: அண்மைக் காலமாக பஞ்சாப் மாநில காங்கிரசில் உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலையிட்டுள்ளார்.

இதன்படி, அம்மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, மூத்தத் தலைவர்கள் வரும் 20ஆம் தேதியன்று டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பு தலைவர்களையும் சந்திக்கும் சோனியா காந்தி இப்பிரச்சினையை தீர்த்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் காங்கிரசில் நிலவும் உள்கட்சி மோதலைத் தீர்ப்பதற்காக சோனியா காந்தி தலைமையில் கடந்த வாரம் மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமரீந்தர் சிங், சித்து ஆகியோரைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதனை அறிக்கையாகத் தயாரித்து கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் சமர்ப்பித்தது.

தனக்கு துணை முதலமைச்சர் பதவியே கிடைத்தாலும் அமரீந்தர் சிங்கின் கீழ் இயல்பாக பணியாற்ற இயலாது என்பதை காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் சித்து தெளிவுபடுத்தியிருந்தார்.

மேலும் அவர் குழுவிடம் கூறுகையில், கட்சி உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள்கூட அமரீந்தர் சிங்கை எளிதில் பார்த்துவிட முடியாது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

பஞ்சாப் பஞ்சாயத்து: அமரீந்தர் சிங், சித்துவை டெல்லிக்கு அழைத்த சோனியா!
பஞ்சாப் பஞ்சாயத்து: அமரீந்தர் சிங், சித்துவை டெல்லிக்கு அழைத்த சோனியா!

முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக சித்து ட்விட்டரில் கருத்துப் போரை தொடுத்தபோது...

  • நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்த சர்ச்சைக்குரிய அறிக்கைகள்,
  • சிரோமணி அகாலிதளம் கட்சியுடனான இணக்கமான போக்கு,
  • சேக்ரிலேஜ் விவகாரம் தொடர்பான விசாரணை

ஆகியவை குறித்து கேள்விகளைத் தொடுத்தார்.

சேக்ரிலேஜ் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும், இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமரீந்தர் சிங் காங்கிரஸ் குழுவிடம் உறுதியளித்தார்.

பஞ்சாபில் கட்சியை வழிநடத்த அமரீந்தர் சிங்குக்கு மாற்று இல்லை என்றும், வரும் 2022 சட்டப்பேரவைத் தேர்தலை அவரது தலைமையில் சந்திக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் குழு கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாப் காங்கிரஸ் உள்கட்சி மோதல் தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைப்படி, கட்சியின் உயர்மட்டக் குழு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து மூன்று பேர் கொண்ட குழு ராகுல் காந்திக்கு விளக்கமளித்தது.

மேலும் முதலமைச்சருக்கு எதிரான சட்டப்பேரவை உறுப்பினர் பர்கத் சிங்கின் அறிக்கைத் தொடர்பாகவும் இதில் விவாதிக்கப்பட்டது. பர்கத் சிங்கிற்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.