டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 29) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ட ஆதார விலையைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் ராகுல் காந்தி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திமுக எம்பிக்கள் பதவியேற்பு