ETV Bharat / bharat

ராஜஸ்தானில் சமூக புறக்கணிப்பை எதிர்கொள்ளும் தலித் குடும்பங்கள்..! - தலித் மக்களை ஒதுக்கி வைத்த கிராமம்

ராஜஸ்தானில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பைர்வா சமூகத்தைச் சேர்ந்த மக்களை மொத்தமாக புறக்கணிப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குற்றம் சாட்டி, காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

ராஜஸ்தான் கிராமத்தில் சமூக புறக்கணிப்பை எதிர்கொள்ளும் தலித் குடும்பங்கள்

author img

By

Published : Oct 20, 2022, 10:48 PM IST

ஜலாவர்: ராஜஸ்தானில் ஜாதவா கிராமத்தில் தலித் மக்கள், பெரும்பான்மை சமுதாயத்தினர் தங்களைக் கிராமத்தை விட்டுத் துரத்துவோம் என்றும் மிரட்டுகிறார்கள் எனக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”ஜாதவா கிராமத்தைச் சேர்ந்த லோதா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பைர்வா சமூகத்தைச் சேர்ந்த மக்களை மனரீதியாகச் சித்திரவதை செய்யப்பட்டதாக, அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வழிபாடு செய்வதில் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பைர்வா சமூகத்தினர் கோயிலில் பாபா ராம்தேவ் கீர்த்தனைகளைப் பாடி வழிபட்டுக் கொண்டிருந்தபோது, லோதா சமூகத்தினர் கீர்த்தனையை நிறுத்துமாறு கூறி அவர்களிடம் பிரச்சனை செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக லோதா சமூகத்தினர் சிறுபான்மை குடும்பங்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டனர், எனவும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துகொள்ளவும் பைர்வா குடும்பங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தனது ஐந்து குடும்பத்தாரை தீயிட்டுக் கொளுத்திய நபர் தானும் தற்கொலை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.