லே: லடாக்கின் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாங் என்னும் கிராமத்தில் அரிய வகை பனிச்சிறுத்தை தென்பட்டுள்ளது. இந்த சிறுத்தையை லடாக்கின் ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ்ஸ் தலைவர் ராகுல் கிருஷ்ணா படம் பிடித்துள்ளார். இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்துக்கு ராகுல் கிருஷ்ணா அளித்த தகவலில், லடாக்கின் தலைநகர் லேயில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள பியாங் என்னும் கிராமத்தில் அழிந்துவரும் பனிச்சிறுத்தையை அதன் இரையுடன் கண்டேன்.
இந்த அரிய காட்சியை எனது கேமரா மூலம் பதிவு செய்தேன். இந்த காட்டிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவை தென்படுவது அரிதினும் அரிதான ஒன்று. இமயமலைகளில் மட்டுமே வசிக்கும் இந்த பனிச்சிறுத்தைகள், நீல ஆடுகளை வேட்டையாடுவதை வழக்கமாக வைத்துள்ளன. இதனடிப்படையிலேயே, வேட்டையாடி உண்டு கொண்டிருக்கும்போது, எனது கண்ணில் பட்டது எனத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் திபெத் பகுதிகளில் மட்டும் பனிச்சிறுத்தைகள் காணப்படுகின்றன. இவை அழிந்துவரும் உயிரினமாகும். உலகம் முழுவதும் மொத்தமாகவே 4,000-க்கும் குறைவான பனிச்சிறுத்தைகள் மட்டுமே உள்ளன. ஆசியாவில் வாழும் பனிச்சிறுத்தைகள் 500-க்கும் குறைவாகவே உள்ளன.
இதனால் இந்தியாவில் வாழும் பனி சிறுத்தைகளை பாதுகாக்கவும், அதன் வாழ்விடத்தையும், உணவு சங்கிலியையும் மேம்படுத்தவும் மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை பெரும்பாலும் மக்கள் கண்களுக்கு தென்படாமலேயே இருப்பை. இவற்றின் சாம்பல் நிற ரோமம் பனி பிரதேசங்களில் அவற்றை சுதாரிக்க கடினமாக இருக்க உதவுகிறது.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் மோகம்.. தாய் கழுத்தை நெரித்து கொலை.. போலீசாரிடம் தற்கொலையென புகார்..