ETV Bharat / bharat

சென்னை - டெல்லி ராஜதானி விரைவு ரயிலில் திடீர் புகை - பயணிகள் பதற்றத்தால் நடுவழியில் ரயில் நிறுத்தம்!

author img

By

Published : Apr 9, 2023, 2:31 PM IST

சென்னை - டெல்லி ராஜதானி விரைவு ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் பதற்றத்திற்குள்ளாகினர்.

Etv Bharat
Etv Bharat

ஆந்திரா : சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ராஜதானி விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் அடுத்த காவாலி ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டு இருந்த போது, திடீரென ரயிலில் இருந்து புகை வெளியேறியது. இதனால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினர்.

இது தொடர்பாக ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் 20 நிமிடங்களில் ரயில் நின்ற நிலையில், பழுது சீர் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரயில் அதிகாரிகள் கூறுகையில், ராஜதானி விரைவு ரயிலின் பி-5 பெட்டியில் ஏற்பட்ட பிரேக் பழுது காரணமாக சக்கரத்தில் இருந்து புகை வந்ததாகவும், பழுது ஏற்பட்ட இடம் கண்டறியப்பட்டு விரைந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் தாமதத்திற்கு பின் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றதாகவும், இந்த சம்பவத்தால் ரயிலில் யாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறினர். ஓடும் ரயிலில் இருந்து திடீரென புகை கிளம்பிய சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

  • Smoke in Chennai-Delhi Rajdhani Express triggered panic among passengers in #AndhraPradesh's Nellore district.

    Railway officials said smoke was because of brake jam. No one was injured in the incident. The train resumed its journey after the repair. pic.twitter.com/xMLE8m3Ytg

    — IANS (@ians_india) April 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க : ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் நடத்த மத்திய அரசு உறுதி - சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.