கான்பெரா: ஆஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (மே 21) நடைபெற்றது. மொத்தமுள்ள 151 இடங்களில் ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவை. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 இடங்களையும், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி 72-க்கும் மேற்பட்ட இடங்களையும் கைப்பற்றியது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் பதவியேற்க உள்ளார். இதனிடையே இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் போட்டியிட்டனர். இவர்களில் 6 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களது பெயர்கள் பின்வருமாறு.
1. நவ்தீப் சிங் சித்து
2. ராஜன் வைத்
3. ஜுகன்தீப் சிங்
4. லவ்ப்ரீத் சிங் நந்தா
5. திரிமான் கில்
6. ஹர்மீத் கவுர். இதில், திரிமான் கில் தொழிலாளர் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகும் அந்தோனி அல்பானீஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து