ETV Bharat / bharat

விநாயகர் சிலையை கரைக்கும்போது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - விநாயகர் சிலை

ஹரியானாவில் விநாயகர் சிலை கரைப்பின் போது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஹரியானாவில் விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வில் 6 பேர் நீரில் மூழ்கி பலி

author img

By

Published : Sep 10, 2022, 11:25 AM IST

சண்டிகர்: ஹரியானா மாநிலம் மஹேந்தர்கர் அருகே நேற்று மாலை விநாயகர் சிலையை கரைக்க சென்ற 9 இளைஞர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களை மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியுடன் மீட்டது. இருப்பினும் ஆகாஷ், நிகுஞ்ச், டிங்கு, நிதின் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், "உயிரிழந்த 4 பேரும் மஹேந்தர்கரை சேர்ந்தவர்கள். ஜக்டோலி கால்வாயில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதைப்பொருட்படுத்தாமல் சிலையை கரைக்க அதில் இறங்கியுள்ளனர் எனத் தெரிவித்தனர். மேலும் சோனிபட் பகுதியில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க சென்ற 2 பேர் யமுனை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓணம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய இளைஞர்களின் கார் விபத்து - மூவர் சடலமாக மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.