ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஜோத்பூர்-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், நள்ளிரவில் காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே காயமடைந்தவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட தகவலில், விபத்துக்குள்ளான விஜய் சிங், உதய் பிரதாப் சிங், மஞ்சு கன்வார், பிரவீன் சிங், தர்பன் சிங், மது கன்வார் ஆகிய 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சுரு (Churu) பகுதியைச் சேர்ந்த இவர்கள், குடும்பத்துடன் குல தெய்வத்தை வழிபட கோயிலுக்கு சென்றுக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பதைபதைக்கும் வீடியோ: மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குதித்த இளம்பெண்