சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட ராட்சத டவர் ராட்டினம் நேற்றிரவு (செப்-4) திடீரென 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் பதிவாகவில்லை. இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மொஹாலியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ராட்டினம் தரையில் இருந்து 30 அடி உயரத்திற்கு மேல செல்கிறது. அதன்பின் திடீரென அப்படியே தரையில் விழுகிறது.
இதையும் படிங்க:லைக்ஸிற்காக ரயிலில் அடிபட்ட இளைஞர்..! : ’ரீல்ஸ்’ தந்த விபரீதம்