ETV Bharat / bharat

கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.11.04 கோடி சொத்துக்கள் முடக்கம்! - Chinese Visa scam

சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sivaganga MP Karti Chidambaram 11 Crore assets has been frozen by the Enforcement Directorate in a money laundering case
பணமோசடி வழக்கில் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது
author img

By

Published : Apr 19, 2023, 12:45 PM IST

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா(INX Media) வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 3 அசையும் சொத்து, 1 அசையா சொத்து என ரூ.11.04 கோடி மதிப்பிலான 4 சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் செவ்வாய்க்கிழமை முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட இந்த நான்கு சொத்துக்களில் ஒன்று கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்து என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

  • ED has attached 4 properties (three movable and one immovable property located at Coorg District, Karnataka) valued at Rs. 11.04 Crore belonging to Karti P Chidambaram and others in the case of INX Media Pvt Ltd and others under the provisions of PMLA, 2002.

    — ED (@dir_ed) April 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டவர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இவரது தந்தை மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஐஎன்எக்எஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கு பிரதிபலனாக ஐஎன்எக்எஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. அதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகமும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் கார்த்தி சிதம்பரத்தின் மீது சீன விசா மோசடி வழக்குடன் தொடர்புடைய மற்றொரு வழக்கையும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேதாந்தா குழும நிறுவனமான தல்வண்டி சபோ பவர் லிமிடெட் (டிஎஸ்பிஎல்) நிறுவத்திற்கு பஞ்சாபின் மான்சாவில் உள்ள 1980 மெகாவாட் அனல் மின் நிலையம் உள்ளது.

2011-ஆம் ஆண்டு இந்த அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சீனத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட திட்ட விசாக்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அவரது நெருங்கிய உதவியாளர் பாஸ்கர் ராமன் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IFS: ஐஎஃப்எஸ் லஞ்ச வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.