பெங்களூரு: பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவும், கர்நாடக அமைச்சருமான ரமேஷ் ஜர்கிஹோலி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியில் புகார் ஒன்றில் சிக்கினார். இதுதொடர்பான காணொலியை சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரமேஷ் ஜர்கிஹோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, அவர்மீது புகாரளித்த சமூக செயற்பாட்டாளர், தனது புகார் மனுவை திரும்ப பெற்றுவிட்டார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தன்மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான புகார்களை சிலர் வேண்டுமென்று கூறுவதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞர் எம்.வி. நகராஜ் புகார் ஒன்றையும் அளித்தார்.
இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் பாதிக்கப்பட்டவரின் நண்பர் ஆகாஷ்தான், அமைச்சர் வீடியோ எனக்கூறி பலரைச் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 70க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
வீடியோவில் உள்ள குரல் சிக்கமங்களூரில் உள்ள நபரின் குரல் போல் இருப்பதாக சந்தேகிக்கும் புலனாய்வுக் குழுவினர், அதை உறுதிப்படுத்த, ஆடியோ மாதிரிகளை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (எஃப்எஸ்எல்) அனுப்பியுள்ளனர். மேலும், இந்த மாதிரிகளின் அறிக்கையை வைத்துதான், அந்நபரை கைது செய்து விசாரிக்க முடியம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பெண் போலீசிடம் பொண்ணு கேட்ட நபர்.. மும்பைக்கு வரச் சொன்ன சல்மான் கான்..