ETV Bharat / bharat

ஜார்கண்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு - சிறப்பு புலனாய்வு குழு விசாரணை - சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த வழக்கை விசாரிக்க (SIT) சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 22, 2022, 10:48 PM IST

ஜார்கண்ட் : மேற்கு சிங்பூம் மாவட்டத் தலைமையகமான சாய்பாசாவில் உள்ள புரானா விமான நிலையம் அருகே பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இது குறித்த வழக்கில் விசாரணைக்காக எஸ்ஐடி அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை எஸ்ஐடி அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சாப்ட்வேர் என்ஜினீயரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் காவல் துறையினர் ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்ஐடியும் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.

இந்த குழுவை சாய்பாசா டிஎஸ்பி திலீப் கல்கோ மற்றும் ஜெகநாத்பூர் டிஎஸ்பி இகுட் டுங்டுங் ஆகியோர் வழிநடத்துகின்றனர். இது குறித்து மேற்கு சிங்பூம் எஸ்பி அசுதோஷ் சேகர் கூறுகையில், “குற்றம் செய்தவர்களைக் கைது செய்ய தொழில்நுட்பப் பிரிவும் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, குற்றவாளிகளை பிடிப்பதற்காக, காவல் துறையினர் ஒவ்வொரு கோணத்திலும், விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிலரை காவலில் எடுத்து விசாரித்து வருவதால், முக்கிய குற்றவாளிகளை பிடிக்க உதவ முடியும் என காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை:

வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக எஸ்பி கூறினார், பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பருடன் பூரண சாய்பாசாவில் உள்ள ஏரோட்ரோமுக்கு சென்றுள்ளார். அதே நேரத்தில், 9-10 இளைஞர்கள் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு சதார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

காவல் துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்த பெண்:

சாய்பாசாவால் பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையினரிடம் கொடுத்த புகாரில், தான் தொழில் ரீதியாக சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளதாகவும், தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். சாய்பாசா முஃபாசில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தனது பணியை செய்து வருகிறார். மாலை 5.30 மணியளவில் தனது நண்பருடன் விமான நிலையத்திற்கு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

அங்கு தனது தோழியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். மாலையில் இருட்டிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் அங்கு வந்த 10 இளைஞர்கள் அவரை அடித்து உதைத்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு இழுத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தோழியிடம் இருந்து செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாயையும் இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: நகையை மீட்டுத் தர ரூ.3000 லஞ்சம்! - வீடியோவில் சிக்கிய எஸ்.ஐ.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.