ETV Bharat / bharat

காணாமல் போன சகோதரிகள் சமூக ஊடகம் மூலம் மீட்பு - என்ன நடந்தது?

உத்தரப் பிரதேசத்தில் சமூக ஊடகத்தின் மூலம் காணாமல் போன இரு சகோதரிகளை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

காணாமல் போன சகோதரிகள் சமூக ஊடகம் மூலம் மீட்பு - என்ன நடந்தது?
காணாமல் போன சகோதரிகள் சமூக ஊடகம் மூலம் மீட்பு - என்ன நடந்தது?
author img

By

Published : Dec 20, 2022, 11:22 AM IST

ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் மல்புரா காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரின் டிசம்பர் 16ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பள்ளிக்குச் சென்ற இரு சகோதரிகள் திரும்பி வரவில்லை. இவர்களில் ஒருவர் 10ஆம் வகுப்பும் மற்றொருவர் 12ஆம் வகுப்பும் படித்து வந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் பெற்றோரிடம் விசாரிக்கையில் மதிப்பெண் குறைவாக எடுத்தது தொடர்பாக சகோதரிகளின் தாய் அவர்களை திட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சகோதரிகள் சென்று வந்த பள்ளிக்கு செல்லும் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் காணாமல் போன சகோதரிகளில் ஒருவரின் சமூக ஊடக கணக்கு கண்டறியப்பட்டுள்ளது. அந்த கணக்கை வைத்து சகோதரிகளை மீட்க காவல் துறையினர் திட்டமிட்டனர். அதன்படி சகோதரிகளுக்கு ஒரு தோழி போல செய்தி அனுப்பி தன்னுடைய உறவினர் உங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர் என்று அவர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த உரையால் மூலம் அவர்களின் இருப்பிடத்தை டிராக் செய்த காவல் துறையினர், உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் சகோதரிகள் இருப்பதை உறுதி செய்தனர். அதன்பின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டுக்கு வந்தால் நிதயுதவி அளிப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதற்கு சகோதரிகளும் ஒப்புக் கொண்டனர். மீரட்டுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு முன்கூட்டியே காத்திருந்த காவல் துறையினர், அவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: கடத்தல்: 4 மாநிலங்களில் இருந்து 6 அஸ்ஸாம் சிறுமிகள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.