ETV Bharat / bharat

இந்தியாவில் தடுப்பூசி விநியோகம்: சீரம், பாரத் பயோடெக் கூட்டறிக்கை

நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் முறையாகச் செயல்படுத்தப்படும் என சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

COVID-19 vaccines
COVID-19 vaccines
author img

By

Published : Jan 5, 2021, 4:11 PM IST

இந்தியாவில் அவசரப் பயன்பாட்டிற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசி ஒப்புதல் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், இரு நிறுவனங்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் அதர் பூனாவாலா, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

அதில், "இரு நிறுவனங்களும் இந்தத் தடுப்பூசி விநியோகத்தைத் திட்டமிட்டபடி முறையாகச் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்வதை எங்கள் கடமையாகக் கொண்டுள்ளோம்" என உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாட்டின் எரிவாயு தேவையை நிறைவேற்ற பன்முகத் திட்டங்கள்: பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.