சண்டிகர்: பஞ்சாப் மாநில தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெறஉள்ளது. பிற்பகல் 2.23 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 92 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும், முன்னிலை பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான நவ்ஜோத் சிங் சித்தும் தனது தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரசிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் கட்சியை தொடங்கியவருமான கேப்டன் அம்ரிந்தர்சிங் தனது சொந்தத் தொகுதியான பாட்டியாலாவில் தோல்வியை தழுவிவிட்டார்.
இந்தத் தேர்தல் வெற்றி குறித்து நவ்ஜோத் சிங் சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சாப் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். மக்களின் குரலே கடவுளின் குரல். ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாப் அரசியல் ஜம்பவான்களை துடைத்தெடுத்த ஆம் ஆத்மியின் துடைப்பம்!!!