மும்பை: மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவின் 40 எம்எல்ஏக்களை தன்வசம் வைத்துக் கொண்டு, ஆளும் மகா விகாஷ் கூட்டணி அரசுக்கு எதிராக கிளம்பியுள்ளார். ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் மகாராஷ்ட்ராவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஷிண்டே மீது சிவசேனா தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ தனாஜி சாவந்த்தின் அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். ஷிண்டே கூட்டணிக்கு எதிராக முழக்கமிட்டபடி அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த அனைத்தையும் அடித்து நொறுக்கினர். அதேபோல் அதிருப்தி எம்எல்ஏக்கள் பலரின் அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கூட இருந்தவர்களே குழி பறித்துவிட்டார்கள் - உத்தவ் தாக்ரே வேதனை