ETV Bharat / bharat

ஆதரவற்றவர்களின் வாரிசு: பத்ம‌ விருது மூலம் அயோத்திக்கு பெருமை சேர்த்த ஷெரீப் சாச்சா!

கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்று இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்து அளப்பரிய பணியை மேற்கொண்டு வரும் ஷெரீப் சாச்சாவுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஷெரீப் சாச்சா, Mohammad Sharif, பத்மஸ்ரீ விருது வாங்கிய ஷெரீப் சாச்சாவின் குடும்பத்தினர்

author img

By

Published : Nov 10, 2021, 12:35 PM IST

Updated : Nov 10, 2021, 4:53 PM IST

அயோத்தி: கடந்த 2020ஆம் ஆண்டுக்ககான பத்த விருதுகள் ஜனவரி 25ஆம் தேதி அன்று அந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, பத்மஶ்ரீ விருது பட்டியலில் உத்தரப் பிரதேசம் அயோத்தியை சேர்ந்த ஓர் இஸ்லாமியர், பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதுவேறு யாருமல்ல , முகமது ஷெரீப் என்ற ஷெரீப் சாச்சாதான் தனது அர்பணிப்புமிக்க பணியின் மூலம் நாட்டையையே திரும்பிப் பார்க்க செய்தார்.

சாச்சாவின் சேவை

சைக்கிள் பழுதுபார்க்கும் தொழிலை மேற்கொண்டு வரும் ஷெரீப் சாச்சா, 40 ஆண்டுகளாக பல சமுதாய பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

ஆரம்பக் காலக்கட்டங்களில் சிதறியிருந்த அவரின்‌ சமூகப்பணியை ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தது அவரின் வாழ்க்கையில் நடந்த‌ பெருந்துயர சம்பவம் ஒன்றுதான் என்றால் நம்பமுடிகிறதா?.

25 ஆண்டுகளுக்கு முன்...

ஆம், 25 ஆண்டுகளுக்கு முன்னர் சுல்தான்பூரில் ஷெரீப்பின் மகன் உயிரிழந்துள்ளார். அவர் இறந்தது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாத நிலையில், அவரை ஆதரவற்ற பிணம் என்ற ரீதியில் அவரது உடலானது அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், தனது மகனுக்கு செலுத்த வேண்டிய‌ ஈம காரியத்தைக்கூட செய்யமுடியவில்லையே என்று மிகவும் வருத்தமடைந்துள்ளார்.

மனமுடைந்திருந்த ஷெரீப், அன்று ஒரு முடிவை எடுத்துள்ள்ளார், இனி ஆதரவற்று இறப்பவர்களுக்கு ஆதரவளித்து, அவர்களுக்கான உரிய இறுதி அஞ்சலியை மேற்கொள்ள வேண்டும் என உறுதி பூண்டுள்ளார்.

மத நம்பிக்கையை மதிப்பவர்

அதன்பின் கடந்த 25 ஆண்டுகளில்‌ அவரின் கவனத்திற்கு வந்த அனைத்து தகவல்களை கொண்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற பிணங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார். அவரை சுற்றியுள்ள பகுதிகளில் யாரும் ஆதரவற்றோர் என்ற நிலைமையில் இறந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் சிரத்தை‌ எடுத்து சேவையாற்றி வருகிறார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற ஷெரீப் சாச்சாவின் குடும்பத்தினர்

இதற்காக எப்போதும் அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் ஷெரீப், ஆதரவற்று இறந்தவர்கள் குறித்த தகவல் கிடைத்ததும் சைக்கிளில் சென்று இறுதி மரியாதையை மேற்கொள்வார். அவரின் குடியிருப்பும் ரிகப்கன்ஜ் என்னும் பகுதியின் கல்லறை தோட்டத்தில்‌தான் இருக்கிறது.

ஷெரீப் அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும் பற்று கொண்டவர். இதனால், எந்த தரப்பு மக்கள் உயிரிழந்தாலும்‌ அவர்களின் மத வழக்கப்படி ஷெரீப் ஈமகாரியங்களில் ஈடுபடுவார்.

விருதுக்கே‌ பெருமை

இறந்தவர் இந்து என்றால் சராயூ நதிக்கரையில் ஈம காரியங்கள் செய்யும் ஷெரீப், இஸ்லாமியர்கள் என்றால் புதைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார்.

இதுபோன்ற ஒப்பற்ற சேவையினால்தான் அவருக்கு 'ஆதரவற்றவர்களின் வாரிசு' என்ற பெயர்‌‌கிடைத்தது எனக் கூறலாம்.

இந்நிலையில்‌, கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டு வந்தது. குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த நவ. 8ஆம் தேதி‌ அன்று பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஷெரீப்‌‌ சாச்சாவுக்கு சமூக சேவகர் துறையிவ், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்‌ பத்மஶ்ரீ விருதை வழங்கினார். இந்த விருதினால் ஷெரீப்புக்கு பெருமையில்லை; அந்த விருதுக்கும் அயோத்திக்கும்தான் பெருமை என்றால் அது மிகையாகாது.

இதையும் படிங்க: சித்துவுக்கு கிடைத்த வெற்றி: பஞ்சாப் தலைமை வழக்கறிஞரின் ராஜினாமா ஏற்பு!

Last Updated : Nov 10, 2021, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.