தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு அன்மையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பித்த பை கோளாறு காரணமாக கடந்த மாதம் இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற சரத் பவாருக்கு வாயில் அல்சர் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அதை நீக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் ஓய்வெடுப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்பால் திரிணாமுல் வேட்பாளர் உயிரிழப்பு