ETV Bharat / bharat

சோர்வாகவும் இல்லை.. ஓய்வு பெறும் திட்டமும் இல்லை... - சரத் பவார் பளீச் பதில்!

அஜித் பவாரின் ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தான் சோர்வாக இல்லை என்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் திட்டமும் இல்லை என்றார்.

Sharad Pawar
Sharad Pawar
author img

By

Published : Jul 8, 2023, 8:01 PM IST

மும்பை : தான் சோர்வாக இல்லை என்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் திட்டமும் இல்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக மராட்டிய அரசியலில் பெரும் புயல் கிளம்பி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 30க்கும் மேற்பட்டோருடன், மாநிலத்தை ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். மராட்டிய துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவரது தலைமையிலான 8 எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் பதவியேற்றுக் கொண்டனர்.

மேலும், கட்சியில் ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதாகவும், தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தெரிவித்து உள்ள அஜித் பவார், கட்சியின் பெயர், சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனுத் தாக்கல் செய்தார்.

இதனிடையே, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் அணி மற்றும் அஜித் பவார் அணியின் ஆலோசனைக் கூட்டம் தனித் தனியாக நடைபெற்ற நிலையில் மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக விரும்புவதாகவும், அதற்கு அவரது அரசியல் குருவான சரத் பவாரின் ஆசி வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எல்லோர் முன்னிலையில் தன்னை வில்லனாக சரத் பவார் சித்தரித்தார் என்றும் இருப்பினும் அவர் மீது தனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு என்றார். ஐஏஎஸ் அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள் என்றும் ஏன் அரசியலில் பாஜக தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுவதாக தெரிவித்த அவர் 83 வயதாகும் சரத் பவார் எப்போது நிறுத்தப் போகிறார் என்றார்.

சரத் பவார் அரசியலை விட்டு ஓய்வு பெற்றால் அவரது நலனுக்காக பிரார்த்திப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் டிஜிட்டல் ஊடகத்திற்கு பேட்டி அளித்து உள்ள சரத் பவார், தான் சோர்வாகவில்லை என்று ஓய்வு பெறும் திட்டமில்லை என்று கூறி உள்ளார்.

மேலும் என்னை ஓய்வு பெறச் சொல்வதற்கு அவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய சரத் பவார் தான் இன்னும் உழைப்பேன் என்று தெரிவித்தார். மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார் என்று தெரியுமா? என்றும் எனக்கு பிரதமர் பதவியோ, அமைச்சர் பதவியோ தேவையில்லை, நான் மக்களுக்காக உழைப்பேன் என்று சரத் பவார் கூறினார்.

கட்சிக்கு எதிராக செயல்படக்கூடியவர்கள் அனைவரும் கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என்றார். கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் சுப்ரியா சுலேவுக்கு வழங்கியதாக பிரபுல் படேல் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சரத் பவார், கட்சித் தொண்டர்கள் அனைவரும் சுப்ரியா சுலேதான் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பியதாகவும் அதனால் அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றார்.

ஆனால் 10 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தா பிரபுல் படேல் தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என்றும் இருப்பினும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக கூறினார்.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம்..! கடைக்காரர் ஸ்மார்ட் ஆபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.