ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு - உத்தரப் பிரதேசத்தில் நடந்த கோர

உத்தரப் பிரதேசத்தில் நடந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

Barabanki
Barabanki
author img

By

Published : Jul 28, 2021, 7:58 AM IST

பாரபங்கி : உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி அருகே பேருந்து மீது பின்னால் வந்த சரக்கு லாரி வந்த வேகத்தில் மோதியது.

இதில் பேருந்தில் இருந்த 18 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அதிகாலை 1 மணிக்கு அயோத்தி தேசிய நெடுஞ்சாலையில் ராம் சனேனி காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்துள்ளது.

இது குறித்து காவலர்கள் கூறுகையில், “பேருந்தில் இருந்தவர்கள் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அதிகாலை 1 மணிக்கு விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 15 பேர் அருகிலுள்ள லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்” என்றனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொழிலாளர்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க : 'இன்னும் யாஷிகாவுக்கு அந்த விஷயம் தெரியாது' - தாயார் உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.