ETV Bharat / bharat

இயல்பு நிலைக்கு திரும்பிய அமலாபுரம்!

மாவட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற ஆந்திரா மாநிலம் அமலாபுரத்தில் வன்முறை குறைந்து நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இயல்பு நிலைக்கு திரும்பிய அமலாபுரம்!- கட்டுக்குள் வைத்த காவல்துறையினர்

author img

By

Published : May 26, 2022, 11:30 AM IST

அமலாபுரம்(ஆந்திர பிரதேசம்): ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் கடந்த செவ்வாய்கிழமை (மே 24) கோணசீமா மாவட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்து கலவரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திர போக்குவரத்து அமைச்சரின் கார், அரசு பேருந்து, மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவை தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் தற்போது அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது. காவல்துறையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து டிஜிபி கேவி ராஜேந்திரநாத் ரெட்டி கூறுகையில், ‘புதன்கிழமை முதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இச்சம்பவம் குறித்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கலவரத்தின் பின்னனி காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை நடக்கிறது.

அமலாபுரம் பகுதியில் 144 தடை உத்தரவு இன்னும் விலக்கப்படவில்லை. நேற்று (மே 25) சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட முற்பட்டனர். இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க:புதிய மாவட்டத்திற்கு பெயர் வைப்பது தொடர்பான விவகாரம் - ஆந்திராவில் அமைச்சர் கார் எரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.